வியாழன், நவம்பர் 10, 2011

குஜராத் இனப்படுகொலை: 31 ஹிந்துத்துவா பயங்கரவாதிகளுக்கு ஆயுள்தண்டனை

0 comments
sardarbura accused
அஹ்மதாபாத்:குஜராத் இனப் படுகொலையின் போது 22 பெண்கள், எட்டு மாதம் பருவமுடைய குழந்தைகள் உள்பட 33 முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொலைச் செய்த வழக்கில் 31 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது விரைவு நீதிமன்றம் கூட்டுப் படுகொலையில் பலியானவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் கொலை, கொலை முயற்சி, கலவரம் நடத்துதல், தீவைப்பு, குற்றகரமான சதித்திட்டம் ஆகிய குற்றங்களுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.சி.ஸ்ரீவஸ்தவா தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகள் மீதான இதர சில வழக்குகளில் மூன்று முதல் 10 வருடம் வரையிலான சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம். மேலும் ஒவ்வொருவரும் ரூ.20 ஆயிரம் வீதம் அபராதம் செலுத்த வேண்டும்.
துவக்கத்தில் உள்ளூர் போலீஸாரால் விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, உச்சநீதிமன்றம் நியமித்த ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவிடம்(எஸ்.ஐ.டி) ஒப்படைக்கப்பட்டது. குஜராத் இனப்படுகொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்த 9 வழக்குகளில் முதல் வழக்கில் தீர்ப்பு ஸர்தார்புரா வழக்கில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த வழக்கில் 76 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர் சிறுவர் என்பதால், அவர் மீதான வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மற்ற 73 பேர் மீதான வழக்கு 2009 ஜூலை முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. தீர்ப்பை எதிர்த்து இரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.
2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குஜராத் மாநிலம் கோத்ரா ரெயில் எரிப்பில் கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்திற்கு முஸ்லிம்கள்தாம் காரணம் என பொய் பிரச்சாரம் சங்க்பரிவார பயங்கரவாதிகளால் வேகமாக பரப்பப்பட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாக படுகொலைச் செய்யப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்திய வரலாற்றிலேயே மிகக் கொடூரமான இனப்படுகொலை குஜராத்தில் நரேந்திர மோடியின் தலைமையில் அரங்கேறியது.
இந்த இனப் படுகொலையின் போது நடந்ததுதான் ஸர்தார்புரா கூட்டுப் படுகொலை. ஸர்தார்புராவில் உள்ள வீடுகளை சங்க்பரிவார பாசிச பயங்கரவாதிகள் தீவைத்துக் கொளுத்தி எரித்து சாம்பலாக்கினர். சொத்துக்களை கொள்ளையடித்தனர். அருகிலிலுள்ள ஊரிலிருந்து கலவரத்திற்கு பயந்து ஸர்தார்புராவில் வீடுகளில் அபயம் தேடிய அப்பாவி முஸ்லிம்களை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு அவர்களின் கதறலையும் பொருட்படுத்தாமல் வெறித்தனமாக வீட்டிற்கு தீவைத்து எரித்துக் கொலைச் செய்தனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கூட்டுப் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், குற்றவாளிகளுக்கு மரணத்தண்டனை விதிக்கவேண்டும் எனவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கூட்டுப் படுகொலைக்காக விநியோகித்த ஆயுதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், கொந்தளித்த மக்கள் கூட்டம்தான் கூட்டுப் படுகொலையை நிகழ்த்தியது என விளக்கமளித்த நீதிபதி, தண்டனையை கொலைக் குற்றத்திற்கான மிகவும் குறைந்தபட்ச தண்டனையான ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தார்.
தண்டனை விதிக்கப்பட்டவர்களில் எட்டுபேர் மட்டுமே தற்பொழுது சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் ஜாமீன் கோரி வெளியே உள்ளனர். கூட்டுப் படுகொலைக்கு தலைமை வகித்த பெரும் புள்ளிகள் இவ்வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது. 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய விசாரணையில் இனப் படுகொலையால் பாதிக்கப்பட்ட 40 பேர் உள்பட 112 சாட்சிகள் விசாரணைச் செய்யப்பட்டனர்.

புனித ஹஜ் பயணிகளுக்கு சேவை புரிந்த விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரம்

0 comments
womens fraternity
மினா:சவூதி அரேபியாவில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லும் புனித பயணிகளுக்கு சவூதி வாழ் இந்தியர்களுக்காக சேவையாற்றி வரும் இந்தியா ஃபெடர்னிடி ஃபாரம் அமைப்பைச் சார்ந்த சேவைத் தொண்டர்கள் சிறப்பானதொரு சேவையை கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வருகின்றனர். இவர்களது சேவை ஹஜ்ஜிற்கும் செல்வோரின் சிரமங்களை குறைப்பதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இவ்வமைப்பின் பெண்கள் பிரிவான விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரமும் ஹாஜிகளுக்கு தங்களால் இயன்ற
சேவையை இவ்வாண்டு ஆற்றியுள்ளனர்.
அரஃபாவிலும், ஷைத்தானுக்கு கல்லெறியும் ஜம்ராக்களிலும், முஸ்தலிஃபாவிலும் சென்றுவிட்டு சோர்ந்து வரும் பெண்களுக்கு ஓரளவாவது ஆறுதலை தரும் சேவைகளை புரிய முடிந்ததாக விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரத்தின் துணைச் செயலாளர் ஷாஹினா
கஃபூர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு மேலும் அதிகமான சேவைத் தொண்டர்கள் பெண் ஹாஜிகளுக்கான சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
ஸுகுல் அரபு சாலை, அல் ஜவ்ஹரா சாலை ஆகியவற்றில் கிங் அப்துல்லாஹ் பாலத்திலிருந்து ஜம்ராவுக்கு அருகிலுள்ள இந்திய ஹஜ் மிஷனின் கண்காணிப்பில் கூடாரங்களிலும், தனியார் ஹஜ் குரூப்புகளின் கூடாரங்களிலும் விமன்ஸ் ஃபெடர்னிடி ஃபாரத்தை சார்ந்த பெண் சேவைத் தொண்டர்கள் சென்று பெண் ஹாஜிகளை சந்தித்தனர்.
இந்தியா ஃபெடர்னிடி ஃபாரத்தின் சார்பாக 1000 சேவைத் தொண்டர்கள் ஹஜ் பயணிகளுக்கு சேவையாற்றியுள்ளனர்.

மலேகான்:புரோகித்தின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 comments
M_Id_247326_Lt_Col_Purohit
மும்பை:2008-ஆம் ஆண்டு மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளியான லெஃப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்தின் ஜாமீன் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடிச் செய்தது. அதேவேளையில், மற்றொரு குற்றவாளியான அஜய் ரவிர்கருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
ஹிந்து ராஷ்ட்ரத்தை நிறுவுவதற்காக சதித்திட்டம் தீட்டியது, குண்டுவெடிப்பை நிகழ்த்த ஆர்.டி.எக்ஸை கொண்டுவந்தது ஆகியவற்றில் புரோகித்திற்கு பங்கிருப்பதாக நீதிபதி ஆர்.பி.சவான் தெரிவித்தார். மாதத்தில் ஒரு நாள் என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் ஆஜராக ஜாமீன் வழங்கப்பட்ட ரவிகருகு நீதிபதி உத்தரவிட்டார்.

ராணுவம் இல்லாத பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தேவையா? – உமர் அப்துல்லாஹ் கேள்வி

0 comments
AFSPA_Kashmir
ஜம்மு:பலவருடங்களாக ராணுவம் நிறுத்தப்படாத பிரதேசங்களில் சிறப்பு அதிகாரச் சட்டத்தின் தேவை எதற்கு என கஷ்மீர் மாநில முதல்வர் உமர் அப்துல்லாஹ் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை குறித்து தீர்மானிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு என அவர் கூறினார். ராணுவம் பணியாற்றாத பிரதேசங்களிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறுவதே தங்களின் நோக்கம் என அவர் கூறினார்.
பாராமுல்லா, ஸோப்பார், குப்வாரா ஆகிய பிரதேசங்களிலிருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற கூறவில்லை என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உமர் அப்துல்லாஹ் தெரிவித்தார். இச்சட்டத்தை வாபஸ் பெறுவதுக் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ராணுவம் பணியாற்றாத பிரதேசங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டத்தை வாபஸ் பெறுவதில் என்ன பிரச்சனை உள்ளது?பணி முடிந்துவிட்டது எனக்கூறி ராணுவம் ஸ்ரீநகரிலும், புத்காமிலும் செயல்பட்டது. ஜம்முகஷ்மீரில் ஊடுருவலை தடுப்பதற்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்பது ராணுவத்தின் கோரிக்கையாகும். ராணுவம் செயல்படாத பகுதிகளில் சட்டப் பாதுகாப்பிற்கு என்ன தேவை? என்பது நேரடியான கேள்வியாகும். இதற்கான பதிலை ராணுவத்திடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
கடைசி துப்பாக்கிச் சத்தத்தையும் நிறுத்தும் வரை காத்திருக்க வேண்டுமானால் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெற ஒருபோதும் இயலாது. அரசுக்கு தைரியம் உள்ளது. துவக்கத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவது சிரமத்தை ஏற்படுத்தலாம். ஆனால் இறுதி பலன் நன்றாக இருக்கும். இவ்வாறு உமர் அப்துல்லாஹ் கூறினார்.

ஷஹ்லா மஸூத் கொலை: சி.பி.ஐ கண்காணிப்பில் இரண்டு பா.ஜ.க தலைவர்கள்

0 comments
masood
புதுடெல்லி:மத்தியபிரதேச மாநிலம் போபாலில் தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷஹ்லா மஸூத் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பா.ஜ.க தலைவர்களைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது. விசாரணைக்காக சி.பி.ஐயின் குழு ஒன்று போபாலில் தங்கியுள்ளது.
போபாலைச் சார்ந்த சி.பி.ஐ குழுவால் வழக்கில் போதிய முன்னேற்றத்தை அடைய முடியாததன் காரணமாக புதிய குழுவிடம் விசாரணை பொறுப்பை ஒப்படைத்திருப்பதாக சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சி.பி.ஐ விசாரணை மேற்கொண்டுவரும் இரண்டு பா.ஜ.க தலைவர்களில் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். ஷஹ்லா மஸூத் வழக்கில் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு தொடர்பிருப்பதாக கூறவது தவறு எனவும், இதற்கான ஆதாரம் இல்லை எனவும் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி ஷஹ்லா மஸூத் தனது வீட்டிற்கு முன்னால் காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வழக்கின் விசாரணையில் துப்பு துலங்காததால் குற்றவாளியை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.ஐ அறிவித்தது.
தகவல் அறியும் உரிமை ஆர்வலரான ஷஹ்லா மஸூத் பட்டப் பகலில் சுட்டுக் கொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் எவரும் தகவல் அளிக்க தயங்குவதன் பின்னணியில் ஏதோ மர்மமான காரணங்கள் இருக்கலாம் என சி.பி.ஐ கூறுகிறது. மாநில போலீஸாரின் விசாரணை தோல்வியை தழுவியதையடுத்து மாநில அரசின் கோரிக்கைக்கு இணங்க சி.பி.ஐ இவ்வழக்கின் விசாரணை பொறுப்பை ஏற்றுக்கொண்டது.

புதன், நவம்பர் 09, 2011

அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை-ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத்...

0 comments
WO-AH711_USIRAN_G_20111108182253
டெஹ்ரான்:அமெரிக்காவை எதிர்கொள்ள அணு ஆயுதங்கள் தேவையில்லை என ஈரானின் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்துள்ளார். மோதலுக்குத்தான் அமெரிக்கா தயாராகிறது என்றால் ஈரானின் பதிலடியை குறித்து சிந்தித்து அமெரிக்காவிற்கு துக்கமடைய வேண்டிய சூழல் ஏற்படும் என நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பின் அருகில் உள்ளதாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சியின் அறிக்கை அண்மையில் கசிந்ததைத் தொடர்ந்து பிராந்தியத்தில் நிலவும் மோதல் சூழலின் பின்னணியில் நஜாதின் எச்சரிக்கை அறிக்கை வெளியாகியுள்ளது. மேலும் நஜாத் கூறியிருப்பதாவது:இதர நாடுகளை வறுமையில் உழலச்செய்து அவர்களுடைய சொத்துக்களை கொள்ளையடித்து அமெரிக்கா தனது சொந்த செல்வ செழிப்பை உறுதிச்செய்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அங்கீகரிக்க இயலாது.
சர்வதேச அணு சக்தி ஏஜன்சியின் தலைவர் யூகியோ அமானோ அமெரிக்காவின் கைப்பாவையாவார். மேற்கத்திய சக்திகளின் அணு ஆயுதங்கள் குறித்த அறிக்கையை தயார் செய்யாத சர்வதேச அணுசக்தி ஏஜன்சி அமெரிக்கா வசம் 5 ஆயிரம் அணு ஆயுதங்கள் இருப்பதை மறந்துவிடக்கூடாது.இவ்வாறு நஜாத் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜன்சி தயார் செய்துள்ள அறிக்கை பொய்யான காரணங்களின் பின்னணியில் உள்ளதாகும்.ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளிடன் அதற்குரிய ஆதாரங்கள் இல்லை என ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.அதிகாரப்பூர்வம் அல்லாத அறிக்கையின் வாதத்தில் உறுதியாக இருந்தால் அதனை விரைவாக வெளியிட வேண்டும் என ஸலாஹி கூறியுள்ளார்.

சிமி தொடர்பு:பொய் வழக்கில் கைதுச்செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் விடுதலை...

0 comments
Karnataka-map3
பெங்களூர்:இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடன்(சிமி) தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி கர்நாடகா மாநிலம் பெல்காமில் பதிவுச்செய்யப்பட்ட 2 வழக்குகளில் 11 முஸ்லிம் இளைஞர்களை நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என கூறி விடுதலைச்செய்துள்ளது. 2008-ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்ட இவ்வழக்கில் பெல்காம் அமர்வு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் முஸ்லிம் இளைஞர்களை
விடுதலைச்செய்வதாக அறிவித்தார்.
இஜாஸ், நபீல் காஸிம், நாஸர் வெங்கிடேஷ், தன்வீர் முல்லா, லியாக்கத் அலி, நதீம் ஸய்யித், நாஸர் பட்டேல், டாக்டர் மும்கோஜ், டாக்டர் ஆஸிஃப், ஜக்கால்ஃபி, இம்தியாஸ் ஆகியோரை நீதிமன்றம் நிரபராதிகள் என தீர்ப்பளித்து விடுதலைச்செய்துள்ளது.நாசவேலைகளுக்காக சதித்திட்டம் தீட்டியதாகவும், பாலத்திற்கு அருகே குண்டு கண்டுபிடிக்கப்பட்டதில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியும் இவ்வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டன.
இவ்வழக்கில் 13 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.இதில் ஏராளமான வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள ஹாஃபிஸ் ஹுஸைன், அபூ பஷீர் ஆகியோர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு இவ்வழக்குகளில் விசாரணை நடைபெற்றது.
2008-ஆம் ஆண்டு மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் சிமி தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி 13 பேரை போலீஸார் கைதுச்செய்ததை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் இவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவுச்செய்யப்பட்டன.பெல்காம் வழக்கில் குற்றவாளியாக ஜோடிக்கப்பட்ட டாக்டர் ஆஸிஃப், டாக்டர் மும்கோஜ் ஆகியோர் ஹூப்ளி வழக்கிலும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். நதீம் ஸய்யித், நாஸர் பட்டேல் ஆகியோர் அஹ்மதாபாத் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெல்காம் வழக்கில் குற்றவாளிகளாக ஜோடிக்கப்பட்ட மீதமுள்ள 7 பேர் நேற்று இரவு விடுதலையானார்கள்.ஹூப்ளி வழக்கில் இதுவரை 150 சாட்சிகளின் விசாரணை நிறைவடைந்துள்ளது.இனியும் இருநூற்றுக்கும் மேற்பட்ட சாட்சிகளின் விசாரணை நடைபெறவேண்டியுள்ளது.அடுத்த விசாரணை இம்மாதம் 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெறும். கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ள அஹ்மதாபாத் வழக்கில் இன்று விசாரணை நடைபெறுகிறது.

இந்தியாவில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படாத வழக்குகள் 72 லட்சம்...

0 comments
criminal
புதுடெல்லி:இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் இதுவரை 72 லட்சம் குற்றவியல் வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்படாமல் தேங்கியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை, கலவரம், பாலியல் வன்புணர்வு ஆகிய வழக்குகள்தாம் தீர்ப்பளிக்கப்படாத வழக்குகளில் பெரும்பகுதியாகும்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் இதில் முன்னணி வகிக்கிறது.ஏழு யூனியன் பிரதேசங்களிலும், 28 மாநிலங்களிலும் 72,58, 502 வழக்குகள் 2010 ஆம் ஆண்டு பதிவுச்செய்யப்பட்டுள்ளன

சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம்...

0 comments
sanjiv-bhatt_new
அஹ்மதாபாத்:மோடி அரசு சஸ்பெண்ட் செய்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக குஜராத் ஐ.பி.எஸ் அசோசியேசன் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.நேற்று நடந்த கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.பி.எஸ் அதிகாரிகளான அதுல் கர்வால், வி.எம்.பர்கி ஆகியோர் அடங்கிய 3 நபர்கள் குழு வீட்டிற்கு வந்து தீர்மானம் நிறைவேற்றிய தகவலை தெரிவித்ததாக சஞ்சீவ் பட்டின் மனைவி ஸ்வேதா தெரிவித்துள்ளார். சத்தியத்திற்கான சஞ்சீவ் பட்டின் போராட்டத்திற்கு அசோசியேசன் பூரண ஆதரவை வாக்குறுதியளித்ததாக அவர் கூறினார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்திட வைத்ததாக குற்றம் சாட்டி போலீஸ்காரர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சஞ்சீவ் பட் கைதுச்செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.